Tuesday, April 25, 2006

செல்போன் கருவிகளுடன் உபரி உபகரணங்கள்.

நாம் நம் செல்போன் கருவியை வாங்கும்போது, அதனுடன் நமக்குக் கிடைக்கக்கூடிய இன்னும் பல உபரி உபகரணங்களை பற்றி அறிந்துக் கொள்ளுவோம்.

செல்போன்களை அடிக்கடி தங்கள் காரில் எடுத்து செல்பவர்கள், "சார்ஜிங் அடாப்டர்" என்ற கருவி ஒன்றை வாங்கி தங்கள் காரில் பொருத்தி கொள்ளலாம். அவர்கள் தங்கள் காரில் பயணம் செய்யும்போது செல்போனை அதன் சார்ஜருடன் இந்த கருவியில் இணைப்பதன் மூலம் தங்கள் செல்போனை சார்ஜ் செய்து கொள்ள முடியும். அடிக்கடி நீண்ட பயணங்களை மேற்கொள்ளுபவர்களுக்கு இந்த "சார்ஜிங் அடப்டர்" மிகவும் உபயோகமானதாகா இருக்கும். இதனால் இவர்கள் தங்கள் பயணம் முழுவதும் செல்போனை தொடர்ந்து உபயோகிக்க முடிகிறது.

நீண்ட நேரம் தொடர்ந்து செல்போனில் பேச வேண்டிய அவசியம் உள்ளவர்களின் வசிதிக்காக "காண்டில் பிரீ" என்ற இணைப்பு கருவி தற்சமயம் கடைகளில் கிடைக்கிறது. நாம் பேசுவதற்கும் கேட்பதற்கும் வசதியை கொண்த இந்த கருவியை நம் செல்போனுடன் இணைத்த பின், செல்போன் கருவியை நம் பாக்கெட்டிலோ, கைப்பையிலோ அல்லது பவுச் உறையிலோ வைத்து விடலாம். அதன் பிறகு, இந்த "காண்டில் பிரீ" இணைப்பை நம் தலைப்பக்கம் பொருத்தி கொண்டு விட்டால், நமக்கு அழைப்பு வரும்போது, செல்போனை வெளியே எடுக்காமலேயே நாம் பேசலாம்.

செல்போனை கையில் பிடித்துக் கொண்டு காதில் வைத்தபடி நிமிடக்கணக்கில் பேசாமல், நம் கைகளை சுதந்திரமாக வைத்து கொண்டோ அல்லது வேறு ஏதாவது வேலையை செய்து கொண்டோ செல்போனை பேச இந்த "கண்டில் பிரீ" இணைப்பு மிகவும் உதவுகிறது. ஆனால், வாகனங்களை ஓட்டியபடி செல்போன் பேசுவது அறவே தவிர்க்க வேண்டியது ஆகும்.

Saturday, April 22, 2006

தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயர்

தமிழ்த் தாத்தா என்று நம்மால் செல்லமாக அழைக்கப்படுபவர் உ.வே. சாமிநாத ஐயர். இவரை ஏன் இப்படி அழைக்கிறோம்.

செல்லரித்து, சிதைந்து, அழியும் தருவாயில் இருந்த ஏராளமான பழந்தமிழ்ச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை சரிபார்த்து, ஒழுங்குபடுத்தி, அச்சிட்டு அழியாத கருவூலங்களாக தமிழ் மொழிக்கு அளித்த பெரியவர் தான் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர்.

அவருடைய உழைப்பும், முயற்சியும் இல்லாமல் இருந்தால், பழந்தமிழ் இலக்கியங்களை நாம் அடியோடு இழந்திருப்போம்.

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற ஒரு சிறு கிராமத்தில் தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயர் அவர்கள் 1885-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 19-ம் நாள் பிறந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வெங்கட் ராமன். அது பாட்டனார் பெயராக இருப்பதால், அப்பெயரிட்டு அழைப்பது மரியதைகுறைவு என்று கருதி அன்னையார் சாமிநாதன் என்ற செல்ல பெயரால் அழைப்பது வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் சாமிநாதன் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் ஐயர் அவர்கள் முறையாகத் தமிழ் கற்றார்.

கும்பகோணம் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த போது தான் பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

கடுமையான உழைப்புக்கும் சிரமத்திற்கும் பிறகு ஐயர் அவர்கள் 1892-ம் ஆண்டு சிலப்பதிகாரத்தைச் சரிபார்த்து பதிப்பித்தார். தொடர்ந்து மணிமேகலை, புறநானுறு ஆகிய நூல்களை பதிப்பித்தார்.

இதே போன்று 1902 - 1904-ம் ஆண்டுகளில் ஐயர் அவர்களால் ஐங்குறுநூறும் பாதிற்றுப்பத்தும் பதிப்பிக்ப்பெற்றன சூலியன் வின்சோன், ஜியு. போப் போன்றவர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

"தமிழ் தாத்தா" என்த் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்ற டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர் அவர்கல்

ஐயர் அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

ஐயர் அவர்களின் அற்புதமான தமிழ் தொண்டினைத் தமிழ் பயின்ற வெளிநாட்டு அறிஞர்களான 1942-ம் ஆண்டு நிறைவு எய்தினார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை இன்று பேசுவதே கேவலம் என்று நினைக்கின்றனர் இந்த காலத்துப் பிள்ளைகள். இந்த கொடுமையை என்னவென்று சொல்லுவது? ................

Wednesday, April 19, 2006

ஆழ்ந்த அன்பிலேயே

ஆழ்ந்த அன்பிலேயே உண்மையான இன்பம் மலர்கிறது.

இன்பங்கள் சேர்ந்து வருவதில்லை, துன்பங்கள் தனியே வருவதில்லை

வயதில் இளைஞனாக இரு, அறிவில் முதியவனாக இரு

யார் புகழ்ச்சியில் பேராசை உடையர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தகுதியில் ஏழைகளாக இருப்பதை நிருபிக்கிறார்கள்.

எங்கே கண்டிப்பும் கட்டுப்பாடும் அதிகமாக இருக்கிறதோ அங்கே கள்ளத்தனம் அதிகமாக இருக்கும்.

அன்பளிப்பு பொருளைவிட அதை அளிக்கும் முறைதான் மதிப்புமிக்கது.

வாதாட பலருக்கு தெரியும், உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.

கொடுப்பதை மறுப்பதும் பெற்றதை நினைப்பதும் நட்பிற்கு அழகு.

நல்லவர் நட்பை பொருள் கொடுத்தாவது கொள்ளுக, தீயவர் நட்பை பொருள் கொடுத்தாவது தள்ளுக.

மனிதன் சூழ்நிலைகளுக்காக படைக்கப்படவில்லை, சூழ்நிலைகள் மனிதனுக்காக படைக்கப்பட்டவை.

click here to see more