Tuesday, May 08, 2007

வங்கதேச கிரிக்கெட்: ராஜ் டிவி தமிழில் நேரடி ஒளிபரப்பு

இந்திய வங்கதேச கிரிக்கெட் தொடரை ராஜ் டிவி நேரடி ஒளிபரப்பு செய்யும் என அந்நிறுவனத்தின் தலைவர் ராஜூ ஈஸ்வரன் டெல்லியில் தெரிவித்தார்.
இந்தியா, வங்க தேச அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 10ம் தேதி துவங்குகிறது.


இதன் நேரடி ஒளிபரப்பு குறித்து ராஜூ ஈஸ்வரன் கூறியதாவது:
வங்கதேச தொடருக்கான போட்டிகளை நியோ ஸ்போர்ட்ஸ் லோகோவுடன், தமிழ் மற்றும் தெலுங்கு வர்ணனையுடன் ராஜ் டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்யும்.


ஆந்திராவில் உள்ள விசா டிவியுடன் இணைந்து இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


எங்களது இந்த முயற்சிக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்தார்.

(மூலம் - வெப்துனியா)

for more visit
http://tamilparks.50webs.com
http://kanyakumari.sitesled.com
http://aboutindia.50webs.com
http://newworld.50webs.com