Wednesday, July 11, 2007

தமிழில் நம்பர் ஒன் நடிகை யார்?

அசின், த்ரிஷா,ஸ்ரேயா என தமிழ் திரையுலக இளம் ஹீரோயின்களில், முதலிடத்தைப் பிடிப்பது யார் என்ற போட்டி நிலவுகிறது. இதற்காக இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர்.

கஜினி பட இந்தி ரீமேக் பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறர் அசின். இருந்தாலும் தமிழ் சினிமாவையும் விட்டு விடக்கூடாது என்பதில் கவனமாகவே இருக்கிறார். தற்போது வேல் படத்தில் சூர்யாவுடன் நடித்து வ்ருகிறார். அசின் இனி மும்பையில் செட்டிலாகிவிடுவார் என கோடம்பாக்க வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட இப்போதெல்லாம் அடிக்கடி சினிமா விழாக்களில் அசினைக் காண முடிகிறது.

ரஜினியுடன் ஜோடி சேர்ந்த பின்னர் ஸ்ரேயா, விஜய் - விக்ரம் என இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து முதலிடத்தை கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார். த்ரிஷாவும் அடுத்து விஜயுடன் ஜோடி சேர காத்திருக்கிறார். ஆனால், தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பெறப்போகும் ஹீரோயின் யார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

(மூலம் - வெப்துனியா)

http://tamilparks.50webs.com/

http://www.funworld.frih.net/tamil/index.php - Tamil Forum

http://itpark.50webs.com - Tips and Tricks for Windows, networking etc...

Thursday, July 05, 2007

'சிக்குன் குனியா' வராமல் தடுக்க சில வழிமுறைகள்

சிக்குன் குனியா... இந்தப் பெயரைக் கேட்டாலே மக்களிடையே ஒருவித பீதி ஏற்படுகிறது. காரணம், இந்நோயால் ஏற்பட்டுவரும் உயிரிழப்புகள்.


தற்போது (ஜூன், 2005) கேரளாவில் சிக்குன் குன்யாவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக வண்ணம் உள்ளன. அத்துடன், தமிழகத்திலும் இந்நோய் பரவக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.


இந்நிலையில், இந்நோய் குறித்தும் அது பரவாமல் தடுக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.


சிக்குன் குனியா என்பது வைரஸ் மூலம் பரவும் நோய். இந்த வைரஸைப் பரப்புவது ஏடெஸ் எஜிப்டி வகை கொசுக்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.


நோயின் அறிகுறிகள் அதிக அளவிலான காய்ச்சலும், மூட்டு வலியும் இந்நோய்க்கு முக்கிய அறிகுறிகள். சில நாட்களில் காய்ச்சல் குறைந்தாலும் ஒரு வாரத்துக்கும் மேலாக மிகக் கடுமையான தலைவலி, மூட்டுவலி ஆகியவையும் தூக்கமின்மையும் உண்டாகும்.


வருமுன் காக்க...


இந்நோய் வந்தபின் மருத்துவத்தை அணுகுவதைக் காட்டிலும், வருமுன் காப்பதே சிறந்தது.


* சிக்குன் குனியாவுக்குக் காரணமான கொசுக்களிடம் இருந்து தங்களைப் பாதுக்காப்பது அவசியம்.

* அதற்கு, வீட்டுக்கு அருகே நீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்வது முக்கியம். * நீர் தேக்கம் இருப்பின் கொசு ஒழிப்பு மருந்துகளை அதில் அடிப்பது நன்மை தரும்.

* கை, கால்களை முழுவதும் மறைக்கும் வகையிலான நீள ஆடைகளை அணிதல் வேண்டும்.

* நீரைப் பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.


(மூலம் - வெப்துனியா)

'சிக்குன் குனியா' வராமல் தடுக்க சில வழிமுறைகள் - தொகுப்பு :
எஸ்.சரவணன்

for more news

http://tamilparks.50webs.com/

http://kanyakumari.sitesled.com/

http://aboutindia.50webs.com/

http://babyworld.sitesled.com/

http://www.uginbruce.co.nr/

http://itpark.50webs.com/ comming soon