Monday, December 07, 2009

மல‌ச்‌சி‌க்கலு‌க்கு மாமரு‌ந்து

ந‌ம் நா‌ட்டி‌ல் வளரு‌ம் பல தாவர‌ங்க‌‌ள் மருத‌்துவ குண‌ங்களை‌க் கொ‌ண்டு‌ள்ளன. அ‌தி‌ல் இலைக‌ள் ம‌ட்டும‌ல்லாம‌ல் மலர்களையும் பழங்களையும் பயன்படுத்திப் பல மருந்துகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ரோஜாப் பூ, உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டவல்லது. இதமான மலமிளக்கியாகவு‌ம் உ‌ள்ளது. கண்களுக்கு ரோஜா இதழ்களால் தயாரிக்கப்படும் பன்னீர் நல்லது.

ஜீரண சக்தியை தூண்ட, உடலுக்கு வலிமை அளிக்க, புத்தி கூர்மையை கூட்ட, உடலில் துர்வாசனையை போக்கவு‌ம் ரோஜா பய‌ன்படு‌கிறது.

யுனானி மரு‌த்தவ‌த்‌தி‌ல் குல்கந்து என்று சொல்லப்படும் மருந்து ரோஜா, பேரீச்சம் பழம் ஆகியவற்றிலிருந்து தயாரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மலச்சிக்கலுக்குக் குல்கந்து ஒரு சிறந்த மருந்து. குடல் சம்பந்தமான வியாதிகளை இது குணப்படுத்துகிறது. 


 மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்  


thanks to webdunia