Monday, October 25, 2010

இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction

இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction
    Post by சங்கவி Yesterday at 5:33 pm
    இதயமானது விசேடமாக திரிபடைந்த இதயத் தசைக்கலங்களால் ஆனது இதில் இரண்டு சோணையறைகைள் 2 இதயவறைகள் உள்ளடங்கலாக இதயப் பெருநாடி சுவாசப் பெருநாடி சுவாச நாளங்கள் மேற் பெருநாளம் கீழ் பெருநாளம் இதயத்திற்கு குருதியை வழங்கும் முடியுரு நாடித்தொகுதி என்பன இதில் அடங்கும். இதயவறைகளுக்கும் சோணையறைகளுக்கும் இடையே வலது இட்து பக்கங்களில் முறையே இருகூர் வால்வு முக்கூர் வால்வு என்பன காணப்படும். பெருநாடியும். சுவாசப்பெருநாடியும் ஆரம்பிக்கும் இடத்தில் அரைமதி வால்வுகள் உள்ளன. இதயத்தசையானது தன்னிச்சையாக கணத்தாக்கத்தை உருவாக்கி சுருங்கி விரியக் கூடியது. இந்தக் கணத்தாக்கமானது வலது சோணையறையிலிருந்து ஏனைய தசைகளுக்கு சிறப்படைந்த கணத்தாக்க கடத்தல் தொகுதியால் கடத்தப்படும். இதன் போது சோணையறைகள் சுருங்கும் போது இருகூர் முக்கூர் வால்வுகள் திறந்து இதயவறைக்கு இரத்தம் செல்லும். பின்பு இதயவறை சுருங்கும் போது இவ் வால்வுகள் மூடிக்கொள்ள அரைமதி வால்வுகள் திறப்பதனால் பெருநாடிகளுக்குள் செல்லும். இதயப் பெருநாடியினூடாக செல்லும் இரத்தம் உடற் பாகங்களுக்கும் சுவாசப் பெருநாடியினூடாக செல்லும் இரத்தமானது முடியுரு நாடி ஊடாக வழங்கப்படும். நுரையீரல்களில் ஒட்சிசன் ஏற்றப்பட்ட குருதியானது சுவாச நாளங்கள் ஊடாக இடது சோணையறைக்கும் உடலின் ஏனைய பாகங்களில் இருந்து வரும் ஒட்சிசன் குறைந்த மேற்பெரு நாளம் கீழ்பெருநாளம் என்பவற்றின் ஊடாக குருதி வலது சோணை அறையையும் அடையும். இதயத்தில் நோயை தீர்மானிக்கும் ஆபத்தை கூட்டும் காரணிகள் ஆவன பரம்பரை அலகுகள் வயது அதிகரித்தல். ஆண்பால் புகைத்தல் உயாகுருதியழுத்தம் குருதியில் அதிகளவு கொலஸ்ரொல் காணப்படல் அதிக உடற்பருமன் போன்றவையாகும. அத்துடன் தொழிற்பாட்டு ரீதியாக வால்வு வளையங்கள் விரிவடைதல் வால்வு வளையங்களில் கல்சியம் படிதல் ருமற்றிக் காய்ச்சல் வால்வுகளில் இதய அகவணியில் நோய்த் தொற்று வால்வை தாங்கும் நார்தசைகள் அறுதல் இதயத்தசை நோய்கள் பிறப்பில் வால்வு கோளாறு ஆகியனவும் இதயத்தில் நோயை உருவாக்கும்.