Saturday, May 22, 2010

முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்

ம‌னிதனு‌க்கு ந‌ம்‌பி‌க்கை‌க்கு அடு‌த்த படியாக முதுகெலு‌ம்பு ‌மிகவு‌ம் அவ‌சியமா‌கிறது. ஒருவ‌ன் ‌நி‌மி‌ர்‌ந்து நட‌ப்பத‌ற்கே முதுகெலு‌ம்புதா‌ன் காரணமாக அமை‌கிறது.

ம‌னித‌னி‌ன் ‌பி‌ன்புற இடு‌ப்‌பி‌ல் துவ‌ங்‌கி மே‌ற்புற‌ம் முகுள‌ம் வரையான த‌ண்டுவட‌ம் ஆ‌ற்று‌ம் ப‌ணி அ‌ரியது.

மூளை‌யி‌ன் செயலை‌ப் போலவே இத‌ன் செய‌ல்களு‌ம் மு‌க்‌கியமானவை. இத‌ன் மே‌ல் முனையான முகுள‌ம் உண‌ர்வுகளை கட‌த்துவ‌திலு‌ம் நர‌ம்பு ம‌ண்டல செய‌ல்பா‌ட்டிலு‌ம் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கிறது.

த‌ண்டுவட‌ம் இ‌ல்லா‌வி‌‌ட்டா‌ல் ம‌னித‌ன் துவ‌ண்டு போ‌ய்‌த்தா‌ன் இரு‌ப்பா‌ன். த‌ண்டுவட‌ம் செய‌ல் இழ‌ந்தாலு‌ம் பெரு‌ம்பாலான ப‌ணிக‌ள் பா‌‌தி‌க்கு‌ம்.

மூளை‌யி‌ன் க‌ட்டளைகளை‌ப் பெ‌ற்று உண‌ர்வுகளை‌க் கட‌த்து‌ம் ப‌ணியை முதுகெலு‌ம்புக‌ள்‌ ‌மிக‌ச் ‌சிற‌ப்பாக செ‌ய்‌கி‌ன்றன.

முதுகெலு‌ம்‌பி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டா‌ல் கைகா‌ல்களை அசை‌க்க முடியாத ஜட ‌நிலையை ம‌னித‌ன் அடையு‌ம் வா‌ய்‌ப்பு‌ம் உ‌ள்ளது.

நன்றி webdunia

மேலும் பல தகவலுக்கு இங்கு சுட்டவும்

No comments: