Friday, January 12, 2007

படித்ததில் ரசித்தவை

ஒருவன் கீழே விழுந்தால் இந்த உலகமே அவன்மீது ஓடத்துவங்கும்.

திறமை மிக்கவன் எக்ஸிமோக்களிடம் கூட குளிர்சாதனப்பெட்டியை விற்றுவிடுவான்.

ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனுடைய பத்து விரல்கள்.

செல்வத்தை உபயோகித்தால் தீர்ந்து விடும். கல்வியை உபயோகித்தால் அதிகரிக்கும்.

குணமிருந்தால் விகாரமும் அழகாக இருக்கும்; குணமில்லையேல் அழகும் விகாரமாகிவிடும்.

சோகம் மேகம் போன்றது; கனமாகி விட்டால் விழுந்து விடும்.

பணத்தை முட்டாள் கூட சம்பாதிக்கலாம். ஆனால் புத்திசாலியால் மட்டுமே காப்பாற்ற முடியும்.

வரலாறு படிப்பது நன்று; வரலாறு படைப்பது அதைவிட நன்று.

தோல்வி என்பது எடுத்த காரியத்தைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை. நீ தோற்றுவிட்டாய் என்பதாகாது.

நாம் செலவு செய்யும்போது பணம் ஜெட் வேகத்தில் பறக்கும்; வரும்போது நொண்டியடித்துக்கொண்டுதான் வரும்.


மேலும் பல நகைசுவைகளுக்கு இங்கு சுட்டவும்

இங்கு உங்களது படைப்புகள் இலவசமாக வெளியிடப்படும்

No comments: