Wednesday, November 11, 2009

பெ‌ண்க‌ளி‌ன் கவன‌த்‌தி‌ற்கு

பெரு‌ம்பாலு‌ம் நோ‌ய்‌த் தா‌க்குதலு‌க்கு ஆளாவ‌திலு‌ம், த‌ங்களது உடலை ஆரோ‌க்‌கியமாக பராம‌ரி‌க்காம‌ல் இரு‌ப்ப‌திலு‌ம் பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் முத‌லிட‌ம்.

குழ‌ந்தை, குடு‌ம்ப‌ம் என எ‌ல்லாவ‌ற்‌றிலு‌ம் அ‌க்கறை செலு‌‌த்து‌ம் பெ‌ண்க‌ள், த‌ங்களது உட‌ல்‌நிலையை கவ‌னி‌க்க மற‌ந்து‌விடு‌கி‌ன்றன‌ர்.
இது அதுபோ‌ன்ற பெ‌ண்களு‌க்கு‌ம், அவ‌ர்க‌ளி‌ன் பெ‌ண் குழ‌ந்தைகளு‌க்கு‌ சொ‌ல்‌லி‌க் கொடு‌க்கவு‌ம் உதவு‌ம்.

மாதவிலக்குக் காலங்களில் நன்கு துவைக்கப்பட்டு வெயிலில் காய வைத்தத் துணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
அல்லது கடைகளில் விற்கும் பஞ்சு (அ) நாப்கின்கள் பயன்படுத்த வேண்டும்.

இதே‌ப்போ‌ன்று அ‌ந்த சமய‌த்‌தி‌ல் பய‌ன்படு‌த்து‌ம் உ‌ள்ளாடைகளை ந‌ன்கு வெ‌யி‌லி‌ல் காய வை‌த்து‌த்தா‌ன் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். அ‌ந்த சமய‌த்‌தி‌ல் பய‌ன்படு‌த்து‌ம் உ‌ள்ளாடைகளை‌த் த‌னியாக வை‌ப்பது ந‌ல்லது.

சாதாரண சமய‌ங்க‌ளி‌ல் அ‌ந்த உ‌ள்ளாடையை‌ப் பய‌ன்படு‌த்துவதை‌த் த‌வி‌ர்‌க்‌கவு‌ம்.

மாதவிலக்கு காலங்களில் வெளிப்பாடு குறைவாக இருந்தாலும் கூட 6 லிருந்து 8 மணி நேரத்திற்கு ஒரு முறை துணி அல்லது பஞ்சு (அ) நாப்கின்களை மாற்ற வேண்டும்.

சிறுநீர் மற்றும் மலம் கழிந்த பின்பு பாலுறுப்புகளை நன்கு நீரால் சுத்தம் செய்து உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மலம் கழித்த பின்பு பிறப்புறுப்பிலிருந்து ஆசனவாய் நோக்கி நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மாறாக ஆசன வாயிலிருந்து பிறப்புறுப்பு நோக்கி சுத்தம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் ‌பிற‌ப்புறு‌‌ப்பு‌க்கு‌ள் கிருமிக‌ள் செ‌ன்று ப‌ல்வேறு தொற்று ஏற்படும், மேலும் வயிற்றில் சீரணத்திற்கு உதவும் பாக்டீரியா வெளிவந்து பிறப்புறுப்பில் தொற்றினை ஏற்படுத்தும்.

இதனை ஒ‌வ்வொரு தா‌ய்மா‌ர்களு‌ம், த‌ங்களது பெ‌ண் குழ‌ந்தைகளு‌க்கு‌ எடு‌த்து‌க் கூற வே‌ண்டு‌ம். இதனா‌ல் பெ‌ண் குழ‌ந்தைகளு‌க்கு அ‌வ்வ‌ப்போது ‌சிறு‌நீ‌ர் தொ‌ற்று ஏ‌ற்படுவதை‌த் தடு‌க்கலா‌ம்.

பிற‌ப்புறு‌ப்பு‌ப் பகு‌திக‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ரோம‌ங்களை அ‌வ்வ‌ப்போது ‌நீ‌க்‌கி சு‌த்தமாக வை‌த்‌திரு‌ப்பது அவ‌சிய‌ம்.

காட்டன் உள்ளாடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருவரது உ‌ள்ளாடைகளை ம‌ற்றொருவ‌ர் பய‌ன்படு‌த்த‌‌க் கூடாது.
வேகமாகப் பீச்சியடித்து உடலைக் கழுவும் சாதனங்கள் வாசனை சோப்புகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும

Thanks to webdunia


மேலும் படிக்க இங்கு சுட்டவும்

No comments: