Friday, November 27, 2009

நீர்க்கட்டு குணமாக முரு‌ங்கை வை‌த்‌திய‌ம்

முரு‌ங்கை ‌கீரையை சா‌ப்‌பிடுவதா‌ல் இரு‌ம்பு ச‌த்து ‌கிடை‌க்கு‌ம். ‌கீரை வகைக‌ளி‌ல் முரு‌ங்கை ‌கீரை ‌ஜீரணமாவ‌து கடின‌ம். எனவே இரவு நேர‌த்‌தி‌ல் முரு‌ங்கை‌க் ‌கீரையை சா‌ப்‌பிட‌க் கூடாது.

முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை தூ‌க்‌கி எ‌றியாம‌ல் அதனை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை,கால் அசதி நீங்கும்.

குழந்தைகளின் வயிற்று உப்புசம் தணிய முருங்கை கீரைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து உட்கொள்ள கொடுக்கவும்.

முருங்கைக் கீரையுடன் சிறிது உப்பு கூட்டி நன்கு வறுக்க வேண்டும். கீரை சுருண்டு உப்புடன் சேர்ந்து கருகும். கீரை நெருப்பு பிடிக்கும் வரை வறுத்து, பின் இறக்கி ஆறியதும் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியேப்பம் வரும்போது அதில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடியுங்கள். அது சரியாகிவிடும்.

முருங்கை கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாக பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரப் பெருக்கும்.

thanks to webdunia 





உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரிக்கு இங்கு சுட்டவும்

No comments: