Tuesday, April 25, 2006

செல்போன் கருவிகளுடன் உபரி உபகரணங்கள்.

நாம் நம் செல்போன் கருவியை வாங்கும்போது, அதனுடன் நமக்குக் கிடைக்கக்கூடிய இன்னும் பல உபரி உபகரணங்களை பற்றி அறிந்துக் கொள்ளுவோம்.

செல்போன்களை அடிக்கடி தங்கள் காரில் எடுத்து செல்பவர்கள், "சார்ஜிங் அடாப்டர்" என்ற கருவி ஒன்றை வாங்கி தங்கள் காரில் பொருத்தி கொள்ளலாம். அவர்கள் தங்கள் காரில் பயணம் செய்யும்போது செல்போனை அதன் சார்ஜருடன் இந்த கருவியில் இணைப்பதன் மூலம் தங்கள் செல்போனை சார்ஜ் செய்து கொள்ள முடியும். அடிக்கடி நீண்ட பயணங்களை மேற்கொள்ளுபவர்களுக்கு இந்த "சார்ஜிங் அடப்டர்" மிகவும் உபயோகமானதாகா இருக்கும். இதனால் இவர்கள் தங்கள் பயணம் முழுவதும் செல்போனை தொடர்ந்து உபயோகிக்க முடிகிறது.

நீண்ட நேரம் தொடர்ந்து செல்போனில் பேச வேண்டிய அவசியம் உள்ளவர்களின் வசிதிக்காக "காண்டில் பிரீ" என்ற இணைப்பு கருவி தற்சமயம் கடைகளில் கிடைக்கிறது. நாம் பேசுவதற்கும் கேட்பதற்கும் வசதியை கொண்த இந்த கருவியை நம் செல்போனுடன் இணைத்த பின், செல்போன் கருவியை நம் பாக்கெட்டிலோ, கைப்பையிலோ அல்லது பவுச் உறையிலோ வைத்து விடலாம். அதன் பிறகு, இந்த "காண்டில் பிரீ" இணைப்பை நம் தலைப்பக்கம் பொருத்தி கொண்டு விட்டால், நமக்கு அழைப்பு வரும்போது, செல்போனை வெளியே எடுக்காமலேயே நாம் பேசலாம்.

செல்போனை கையில் பிடித்துக் கொண்டு காதில் வைத்தபடி நிமிடக்கணக்கில் பேசாமல், நம் கைகளை சுதந்திரமாக வைத்து கொண்டோ அல்லது வேறு ஏதாவது வேலையை செய்து கொண்டோ செல்போனை பேச இந்த "கண்டில் பிரீ" இணைப்பு மிகவும் உதவுகிறது. ஆனால், வாகனங்களை ஓட்டியபடி செல்போன் பேசுவது அறவே தவிர்க்க வேண்டியது ஆகும்.

No comments: