Friday, May 05, 2006

முக்கிய வீட்டு குறிப்புகள்

வெஜிடபிள் சாலட் செய்யும் போது நீர் அதிகமாகி விட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போடுங்கள். சரியாகி விடும். சுவையாகவும் இருக்கும்.

கோதுமை திரிக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையும் சேர்த்து போட்டு திரிச்சால் சப்பாத்தியோ, பூரியோ.......எதுவானாலும் சுவை - வசனை - சத்து மூணும் அதிகப்படியாகும்.

புதுசா வாங்கின அரிசி, வடிக்கும் போது குழைஞ்சிடுதா?
அரை மூடி எலுமிச்சை பழச்சாறு விட்டு இறக்குங்க. பொல, பொலன்னு இருக்கும்.

கத்திரிக்கா, கூட்டோ, பொரியலோ, எது செஞ்சாலும் கொஞ்சம் கடலை மாவை தூவி சில நிமிடம் கழித்து இறக்குங்க. மணம் கம, கமன்னு இருக்கும்.