Monday, July 17, 2006

இளமை காக்கும் உணவு முறைகள்! (தக்காளி)

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் அரிய பழம் இது. தக்காளியில் உள்ள சிட்ரிக், பாஸ்போரிக், மாலிக் ஆகிய அமிலங்கள் இரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றன.

புற்று நோயைத் தவிர்க்கும் பி1 (P1) என்ற பொருளும், உடலுக்கு நிறத்தையும் மனதிற்குத் துடிப்பையும் வழங்கும் ‘லைகோபென்’ என்ற பொருளும் தக்காளியில் உள்ளன.

கலோரி குறைவாக உள்ள பழம் இது. உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ளலாம். தினமும் 5 பழங்கள் சாப்பிட்டுவந்தால் உடல் எடை இரண்டே மாதத்தில் குறைந்து விடும். இத்துடன் உடலின் எந்தப் பகுதியில் எந்தவிதமான நோய்க்கிருமி இருந்தாலும் அந்த விஷக்கிருமிகளை அப்புறப்படுத்தி, சிறுநீரை நன்கு வெளியேறச் செய்து, அதன் மூலம் நோய்க்கிருமிகள் அனைத்தையும் உடலிலிருந்து வெளியேறச் செய்துவிடும். இதனால் கச்சிதமான தோற்றத்தில் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

தக்காளியில் வைட்டமின் A, வைட்டமின் C, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிக அளவு உள்ளன. எனவே, தக்காளிச்சாறை உணவு சாப்பிடுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு அருந்தினால் சாப்பாடு குறைவாகச் சாப்பிடலாம். போதிய சத்துணவும் தக்காளிச் சாறு மூலம் கிடைத்துவிடுவதால் உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.

நடுத்தர மக்களின் அரிய பழம் இது. ஆப்பிள், பப்பாளி, திராட்சையை விட விலை குறைவு என்பதால் தக்காளிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு இளமையை எளிதில் புதுப்பித்துக் கொள்ளலாம். ஏனென்றால், யூரிக் அமிலம் என்ற விஷ அமிலம் அப்புறப்படுத்தப்படுகிறது. கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது தக்காளிச் சாறு.

தக்காளிச் சாறுடன் காரட் அல்லது பீட்ரூட் சாறு அருந்துவது நல்லது. முதுமையிலும் கண்பார்வை தெளிவாக இருக்க வைட்டமின் A நிறைந்த தக்காளிச் சாறு அதிகம் உதவும்.

6 comments:

வடுவூர் குமார் said...

ஆஹா அப்படியா!!!
செய்து பார்த்துவிடுவோம்.நல்ல நாளிலே பச்சையையாக சாப்பிட பிடிக்கும்.இனி கவலையில்லை.

வெற்றி said...

இளமையைப் பேன இப்படி ஒரு சிக்கனமான வழியைத் தந்தமைக்கு மிக்க நன்றி. நாளை முதல் 5 தக்காளிப்பழம் உண்கிறேன். நன்றி.

Esha Tips said...

Thanks for your nice comments

வல்லிசிம்ஹன் said...

hi, thank you for reminding abt tomatoes.
will take up eating them again.

Anonymous said...

Greets to the webmaster of this wonderful site. Keep working. Thank you.
»

Sivabalan said...

Very Useful post..

Keep up your good work..

Thanks..