Monday, July 17, 2006

வெள்ளைப்பூண்டு

வெள்ளைப்பூண்டின் மாபெரும் சிறப்பு நோய்க்கிருமிகளை உடனுக்குடன் அழிப்பது. 400 விதமான இரசாயனப் பொருட்கள் வெள்ளைப்பூண்டில் கலந்திருப்பதாக ஜீன் கார்பெட் என்பவர் கூறுகிறார். இவர் எழுதிய ‘முதுமை அடைவதை இப்போதே நிறுத்துங்கள்’ என்ற நூலில் இந்த 400 இரசாயனப் பொருட்களில் பெரும்பாலானவை உடல் திசுக்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்து உடலை இளமைத் துடிப்புடன் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் என்கிறார்.

ஆயுர்வேத மருத்துவத்தில் முடி நன்கு வளரவும், வெண்புள்ளிகள் மறையவும் தினமும் வெள்ளைப் பூண்டு சாப்பிடச் சொல்கின்றனர்.

பாக்டீரியாக்களை அழிக்கவல்ல பெனிசிலின் அல்லது ‘டெட்டிராசிலின்’ ஆகிய மருந்துகளில் சக்தி வாய்ந்த, பூண்டில் உள்ள ‘அலிசின்’ என்ற பொருள் உள்ளது. காசநோய், டைபாயிட் முதலிய நோய்களின் கிருமிகளை அலிசின் அறவே ஒழித்துவிடுகிறது.

மீண்டும் இளமையைப் புதுப்பித்துத் தருவதில் வெள்ளைப்பூண்டு சிறந்து விளங்குகிறது. இரத்தத்தில் உள்ள நோய் நுண்ம நச்சூட்டுப் பொருள்களை வெளித்தள்ளி விடுகிறது. இரத்தத்திற்கு மீண்டும் வீரியம் ஊட்டி, இரத்த ஓட்டத்தை நன்கு செயல்பட வைக்கிறது. உடலின் வெப்பநிலையையும் தொடர்ந்து சீராக வைத்திருக்கிறது. இதனால் வயதானவர்கள் உடல் மற்றும் உள்ள ரீதியாகத் தினமும் இளமைத் துடிப்புடன் செயல்பட வைக்கிறது.

ஐந்து பூண்டுப் பற்களை எண்ணெயில் வதக்கி தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. சமையலில் அதிகம் சேர்க்கவும். மூன்று பூண்டுப் பற்களைப் பாலில் காய்ச்சி அருந்திவிட்டு இரவில் படுப்பது நல்லது.

பூண்டில் உள்ள சல்ஃபர் உப்பு ஆரோக்கியமான தோல், முடி, நகங்கள் பெற உதவுகிறது. உடலில் உள்ள குப்பைகளையும் விஷமான பொருட்களையும் உடனே வெளியேற்ற உதவுகிறது. தோல் சுத்தமாக, பளபளப்பாக, ஒளிரும் விதத்தில் பாதுகாக்கிறது. அதற்காக B காம்ப்ளக்ஸ் வைட்டமின்களுடன் இணைந்து தோலை மிகவும் ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது. கல்லீரலின் பணிகளும் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.

சல்ஃபர் உப்பைப்போலவே அயோடின் உப்பும் பூண்டில் அதிகம் உள்ளது. தைராய்டு சுரப்பியில்தான் அயோடின் உப்பு சேமிப்பாக உள்ளது. இதிலிருந்து தைராக்ஸின் சுரக்கிறது. அயோடின் உப்பு குறைந்தால் ‘தைராக்ஸின்’ சுரப்பது குறையும். வளர்சிதை மாற்றத்திலும் திசுக்கள் ஆக்ஸிஜனை உபயோகித்துக் கொள்வதிலும் தைராக்ஸின்தான் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. இதனால் இதயம் சீராகத் துடிக்கிறது. சிறுநீர் மூலம் கால்சிய உப்புக்கள் வெளியேறவும் உதவி செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மூளையை விழிப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே, தினமும் 5 பூண்டுப் பற்களாவது சாப்பிடுங்கள். மீன், முட்டை போன்றவைகூட சாப்பிடாத சைவ உணவுக்காரர்களுக்கு இந்த அயோடின் உப்பு வெள்ளைப்பூண்டு மூலம்தான் நன்கு உடலுக்குக் கிடைக்கும்.

2 comments:

Anonymous said...

Here are some links that I believe will be interested

Anonymous said...

Your are Excellent. And so is your site! Keep up the good work. Bookmarked.
»