Friday, July 28, 2006

இன்டர்நெட்டை விழுங்கப் போகும் சூப்பர் வைரஸ்?

வைரஸ் புரோகிராம்களை எழுதும் கம்ப்யூட்டர் கிரிமினல்கள் "தாங்கள் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் இன்டர்நெட்டையே கைக்குள் போட்டுக் கொள்ள முடியும்". அதிர்ச்சியாக இருக்கிறதா? இது மூன்று பெரிய த.தொ. துறை நிபுணர்கள் ஆராய்ச்சி நடத்திக் கண்டுபிடித்த விஷயம்.

இன்டர்நெட்டுடன் இணைக்கப்பட்ட ஒரு கோடி கம்ப்யூட்டர்களை சில மணி நேரங்களில் தாக்கி செயலிழக்க வைக்கக் கூடிய மிக ஆபத்தான சூப்பர் வார்ம் (வார்ம் என்றால் அளவில்லாமல் குட்டி போடும் வைரஸ் வகை) ஒன்றை வெகு சீக்கிரத்தில் எதிர்பார்க்கலாம் என்று இந்த நிபுணர்கள் சொல்கிறார்கள்.

சமீபத்தில் தாக்கிய SQLsnake என்ற வார்ம் இது வரை 6 லட்சத்திற்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களைத் தாக்கி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இது வரை நெட்டைத் தாக்கிய டிஜிட்டல் கிருமிகளிலேயே இதுதான் மிக வலுவானது. இதை விட ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

"ஒரு கிரிமினல் பத்து லட்சம், அல்லது 10 மில்லியன் (ஒரு கோடி) இன்டர்நெட் ஹோஸ்ட்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும்" என்கிறது ஒரு அறிக்கை. இந்த அறிக்கையைத் தொகுத்தவர்கள் கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனமான சிலிக்கன் டிஃபென்ஸின் ஸ்டூவர்ட் ஸ்டானிஃபோர்ட், ஐ.சி.எஸ்.ஐ. இன்டர்நெட் ஆராய்ச்சி மையத்தின் வெர்ன் பாக்ஸன், பெர்க்கிலி பல்கலைக்கழகத்தின் நிக்கோலஸ் வீவர்.

"கிரிமினல்கள் அப்படி கைக்குள் போட்டுக்கொண்டுவிட்டால் அந்த கம்ப்யூட்டர்களை வைத்து பிரம்மாண்டமான அளவில் டிஸ்ட்ரிப்யூட்டட் டினையல் ஆஃப் சர்வீஸ் (ddos) தாக்குதல்களைத் தொடுக்க முடியும். அது மட்டுமல்ல - ரகசியமான, முக்கியமான தகவல்களைத் திருடவோ சேதப்படுத்தவோ முடியும், மேலும் நுணுக்கமான முறைகளில் ஒரு நெட்வொர்க்கைக் குழப்பித் தொந்தரவு செய்ய முடியும்" என்கிறது அந்த அறிக்கை.

"How to 0wn the Internet in Your Spare Time" என்ற இந்த ஆராய்ச்சிக் கட்டுரை (டி-வுக்கு பதிலாக ஜீரோ போடுவது கம்ப்யூட்டர் கிரிமினல்களின் பழக்கம்), இந்த வருட ஆகஸ்ட்டில் நடக்கப் போகும் யூஸ்னிக்ஸ் பாதுகாப்பு கருத்தரங்கத்தில் அவர்கள் படிக்கப் போகும் ப்ரெசன்டேஷனின் முன்னோட்டம்.

SQLsnake, Code Red, Nimda போன்ற வலைமுழுங்கி வைரஸ்கள் இனி இன்டர்நெட்டிற்கு என்னவெல்லாம் ஆகப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தான் என்கிறது

4 comments:

ENNAR said...

ஆக்கங்கள் அழிவுக்கேவா?

மு. மயூரன் said...

வலை முழுங்கி நச்சு நிரல்கள் (வைரஸ்) எல்லாம் வின்டோசுக்கு மட்டும் தானே? அதையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Anonymous said...

Here are some links that I believe will be interested

Esha Tips said...

Thanks for the comments