Friday, July 28, 2006

ஃபுஜிட்°சு நிறுவனம் இந்தியாவில் சாஃப்ட்வேர் மையம்

சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான ஃபுஜிட்சு இந்தியாவில் அதன் ஆஃப்ஷோர் மென்பொருள் தயாரிப்பு மையத்தை அமைக்கிறது. இந்த நிறுவனம் ஆண்டிற்கு ரூ.4,500 கோடி விற்று முதலை கொண்டுள்ளது.

இந்த மையம் ஐதராபாத்தில் துவங்கப்படும் என்றும் இதன் செயல்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்ப்பதாக அந்த நிறுவன மூத்த துணைத்தலைவர் சாய் சீ காங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிறுவனம் பூனாவிலும் மையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரூ. 2,000 கோடி டாலரை வருவாயாக பெற்று வருகிறது. பெங்களூரில் இந்த நிறுவனம் அதன் இரண்டாவது அலுவலகத்தை திறந்துள்ளது.

செர்வர், கம்ப்யூட்டர் சேமிப்பு பொருட்கள், நோட் புக்° என்று அழைக்கப்படும் லேப்-டாப்கள், ஆகியவற்றில் இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடிக்க இந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. செர்வர்களுக்கான இந்திய சந்தையில் 5 சதவீதத்தை ஃபுஜிட்சு பிடிக்க திட்டமிட்டுள்ளது.

4 comments:

Anonymous said...

Very pretty site! Keep working. thnx!
»

Anonymous said...

I say briefly: Best! Useful information. Good job guys.
»

பொன்ஸ்~~Poorna said...

இது பற்றிய சுட்டி ஏதேனும் தர முடியுமா? பூனாவில் உள்ள ராபிடைம் நிறுவனம் தான் Fujitsuவின் அதிகாரப் பூர்வ இந்திய நிறுவனமாக செயல்படுவதாக நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்..

அவர்களது இணைய பக்கமும் அதையேதான் சொல்கிறது..

Esha Tips said...

visit http://tamilparks.50webs.com for more